Hello world!
இறையேசுவின் நாமத்திலும், மருதமடு தாயின் பரிந்துரையோடு, அன்போடு எமது மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவேற்கின்றோம்.இலங்கையிலேயே மன்னார் மறைமாவட்டம் ஏறக்குறைய 60% மான கத்தோலிக்கரை கொண்ட விசுவாசத்தின் புனித பூமி.
இறைவன் தரும் மாபெரும் கொடையான “தேவ அழைத்தலின் விளைநிலம்”. இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு மேலாக 600 க்கும் மேற்ப்பட்ட சாதாரண மக்கள் “கிறிஸ்தவ விசுவாசத்திற்காய்” தம் உயிரை தியாகம் செய்தனர்.அதுதான் இன்று “தோட்டவெளி” பங்காக இறைமக்களின் தியான மையமாக உயர்ந்து நிற்கிறது.
அதே விசுவாசத்தின் பயணத்தில் எம் மக்களின் இதயமாக மருதமடு தாயின் திருத்தலம்இ மறைமாவட்டத்தின் விசுவாசத்தின் சொத்தாகஇ அமைதியின் ஆலயமாக அமைந்திருக்கிறது. மன்னார் மறைமாவட்ட சிறிய குருமடம் மருதமடு தாயின் நாமத்திலே பல குருக்களை பெற்றெடுத்து இன்று 50க்கும் அதிகமான குருக்கள் ஆயரோடு இணைந்து இத் துன்பகரமான நாட்களிலே பணிசெய்கிறார்கள். மக்களின் ஆன்மீக விடிவுதான் எமது பணி என்று கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள்.
எம் மக்கள் வாழ்வில் அக்கறை கொள்ளும் அனைவரையும்இஎம் அன்பின் மருதமடு தாயின் பாதத்திலே தினமும் ஒப்படைக்கின்றோம்.எம் மக்களின் வளர்ச்சியின் பாதையிலே நாம் இங்கு சந்திப்போம்.எம்மை வழிநடத்த உங்கள் சந்திப்பை எதிர்பார்க்கின்றோம்.

